செவ்வாய், 25 மார்ச், 2014

ஏழாம் அறிவு - துணிந்தோர்க்கே வாழும் தகுதி உண்டு ...!


எதையும் எதிர்கொள்ளும்திறன் உடையோர்க்கே இத்தரணியில் வாழும் தகுதியுண்டு.... இதோ இதை நிரூபிக்க வருகிறார்கள் இந்த இளம் வீரர்கள் ..
60 - 70 அடி உயர மரத்தின் பொந்திலிருந்து , பொறித்து ஓரிரு நாட்களே ஆன வாத்துக்குஞ்சுகள் .. குதித்துத் தரையிறங்குகின்றன ... அதன் வயதையும், எடையையும், குதிக்கும் உயரத்தையும் கணக்கிட்டால் ... விழுந்தபின்னர் அது உயிரோடு இருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் / அதிசயம் .
இப்படி உந்திக் குதித்து ....
இப்படி நெஞ்சால் தரையிறங்க வேண்டும் என்னும் நுட்பம் எப்படி அறிந்தார்கள் இவர்கள் ...!
இறக்கை முளைக்கும் முன்னரே பறந்து , இதோ நடைபோட்டு , அடுத்து நீரைக் கண்டவுடன் நீச்சலடிக்க வேண்டும் ... ஒரு சாதனைப் பயணம் தொடங்குகிறது இங்கே ... அம்மாவின் வழிகாட்டுதலோடும்...என்னால் முடியும் என்ற நம்பிக்கையின் துணையோடும்...!

4 கருத்துகள்: