திங்கள், 31 மார்ச், 2014

அலை கடலின் ஊடே.....!


அலைகள் தாலாட்டும் அமைதியான கடல்ப்பயணம்...அது தான் சொர்க்கம்..! ஆனால்..அலைகள் மிரண்டுவிட்டால்....
வயிற்றுக்குள் குடல் புரண்டு.. ஒவ்வொரு அலைஎழுச்சிக்கும் தொண்டைவரை வந்து போகும்..! இருக்காது இது போல நரகம் !!!

ஞாயிறு, 30 மார்ச், 2014

கேட்டும் ., கேடும் ...!


GATEன்முன் நோட்டம் விடுவோரின் ஆட்டமெல்லாம்
கேட்டின்பின் வீழ்ந்து விடும் :))

வெள்ளி, 28 மார்ச், 2014

அட...! இவ்வளவு எளிதா ...! - 4 / முட்டை


முட்டையின் வெள்ளை , மஞ்சள் கருக்களை எளிதாகப் பிரிக்கும் முறை
.
அவித்தமுட்டையின் ஓடு நீக்கும் முறை

ஏதாவது தேறுமா ? சொல்லுங்க மக்களே :))

புதன், 26 மார்ச், 2014

ப்ரூஸ் லீ..........1


1973லேயே ஒய்ந்து போன புயல் .41 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் , இன்னும் இப்புயலின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறதென்றால் அவரது ஆளுமைக்கு வந்தனங்கள் .
தற்காப்புக்கலை/மார்சில் ஆர்ட் -ன் மேல் ஒரு ஈடுபாடு எற்பட, வெளிப்படையாக திரைத்துறை மூலம் முதல்விதை போட்டவர் இவர்தான் எனக் கூறலாம்.
இது ஒரு அறிமுகம் தான் .இவரைப் பற்றிய பதிவுகள் தொடரும் :)

செவ்வாய், 25 மார்ச், 2014

ஏழாம் அறிவு - துணிந்தோர்க்கே வாழும் தகுதி உண்டு ...!


எதையும் எதிர்கொள்ளும்திறன் உடையோர்க்கே இத்தரணியில் வாழும் தகுதியுண்டு.... இதோ இதை நிரூபிக்க வருகிறார்கள் இந்த இளம் வீரர்கள் ..
60 - 70 அடி உயர மரத்தின் பொந்திலிருந்து , பொறித்து ஓரிரு நாட்களே ஆன வாத்துக்குஞ்சுகள் .. குதித்துத் தரையிறங்குகின்றன ... அதன் வயதையும், எடையையும், குதிக்கும் உயரத்தையும் கணக்கிட்டால் ... விழுந்தபின்னர் அது உயிரோடு இருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் / அதிசயம் .
இப்படி உந்திக் குதித்து ....
இப்படி நெஞ்சால் தரையிறங்க வேண்டும் என்னும் நுட்பம் எப்படி அறிந்தார்கள் இவர்கள் ...!
இறக்கை முளைக்கும் முன்னரே பறந்து , இதோ நடைபோட்டு , அடுத்து நீரைக் கண்டவுடன் நீச்சலடிக்க வேண்டும் ... ஒரு சாதனைப் பயணம் தொடங்குகிறது இங்கே ... அம்மாவின் வழிகாட்டுதலோடும்...என்னால் முடியும் என்ற நம்பிக்கையின் துணையோடும்...!

திங்கள், 24 மார்ச், 2014

தெரியுமா உங்களுக்கு? - 1 / கோழி


அட.. கோழியைப் பற்றித் எங்களுக்குத் தெரியாதா ? .. என்னத்த அப்படி புதுசா சொல்லப் போறாரு !!!! என்று கேட்க நினைகின்றீர்கள் தானே :)

சின்ன விளக்கம் தாரேன் மக்களே..முடிவில் இதே கேள்வியை உங்களால் கேட்க முடியாது என்பது எனக்குத் தெரியும்:))

கோழிக்கு உள்ள ஒரு சிறப்புத் திறமை ..அதன் இலக்கில் நிலைக்கும் திற்ன் / போக்கஸ்/ கான்சண்ட்ரேசன்/ ஸ்டெபிளைசேசன்.
ஆம் ..கோழியை கையில் தூக்கிக் கொள்ளுங்கள் .. அது ஒரு பொருளைப் பார்க்கும் படிச் செய்யுங்கள் ..இப்போழுது கோழியை மேலும் கீழும் அசையுங்கள் ... உடல் மட்டுமே மேலும் கீழும் போகும் .. தலை அசையாமல் அதே இடத்திலேயே இருக்கும் ( அதன் கழுத்தின் நீளத்தின் அளவே அசைக்க வேண்டும் ).. இது போல பக்க வாட்டிலும், முன்னும் பின்னும் அசைத்துப் பார்த்துவிட்டு ..இப்போது கேள்வியைக் கேளுங்கள் ..பார்ப்போம் :))

பிற பறவைகள், விலங்குகள் பற்றிப் பின்னர் தொடர்வேன்
(உங்களுக்கு விருப்பமிருந்தால் :)

ஞாயிறு, 23 மார்ச், 2014

ஒர் அதிவேகப் பயணம் முடித்து , பூமிக்குத் திரும்பத தயாரா நீங்கள் ...!


பயணம் 2 ;
http://duraigif.blogspot.in/2014/03/blog-post_23.html பதிவில் தரையிலிருந்து 100 மில்லியன் லைட் இயர்ஸ் / ஒளிவருட தூரம் வரை சென்றுவிட்டோம்.. இதோ இப்பொழுது ஒரேமூச்சில் தரையைத்தொட்டு ,மனித உடலின் உள்ளுக்குள் துளைத்துச் சொல்லத் தயாராகவும் ...இதோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்..
9.....8....7....6....5....4.....3...2....1.....0
100 மில்லியன் லைட் இயர்ஸ் / ஒளிவருட தூரத்திலிருந்து 10செமீ வரை வரை

10செமீயிலிருந்து 1 மைக்ரான் வரை

1 மைக்ரான்லிருந்து ~0.0001ஆங்க்ஸ்ட்ராம்ஸ் வரை

ஒர் அதிவேகப் பயணத்திற்கு தயாரா நீங்கள் ...!


பயணம் 1 ;
பிஎஸ்எல்வி/ஜிஎஸ்எல்வி ராக்கெட் வேகத்தைவிட ஒரு அதிவேகப் பயணத்திற்கு, பறவைப் பார்வைக்கு உடனே தயாராகவும் .. இதோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்..
9.....8....7....6....5....4.....3...2....1.....0
1மீட்டர் உயரத்திலிருந்து.. 1மில்லியன் மீட்டர் உயரம் வரை
1மில்லியன் மீட்டர் - 1மில்லியன் மில்லியன் மீட்டர் உயரம் வரை
1மில்லியன் மில்லியன் மீட்டர் - 10,000 லைட் இயர்ஸ் / ஒளிவருட தூரம் வர
10,000 லைட் இயர்ஸ் / ஒளிவருட தூரம் - 100 மில்லியன் லைட் இயர்ஸ் / ஒளிவருட தூரம் வரை

வெள்ளி, 21 மார்ச், 2014

அடங்கிப்போகும் நிலமும்., அடங்க மறுக்கும் ஆறும் ..! /டைம் லாப்ஸ்


வாழுகாலத்தில்.. கற்றியுள்ள நிலப்பரப்பில் பெரியஅளவில் மாறுதல்களையோ, ஆற்றின் ஓட்டத்தில்/ அதன்பாதையில் பெரிய மாற்றங்களையோ நாம் உணர்வதில்லை. ஆனால் ஒரு ஒரு குறிப்பிட்ட காலத்தின் பதிவுகளை ஒருங்கே காணும் பொழுது ...!!! அந்த அற்புதம் / அதிர்ச்சி / அதிசயத்தைக் காணுங்கள்

ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு காட்டாமல் அடங்கிப் போகும் நிலம் ..
வட அமெரிக்கா / லாஸ் வேகாஸ்

36 ஆண்டு ஆக்கிரமிப்பின்(!) பதிவு (1974 - 2010)
.
.
.
.
.
.
.
.

அடங்க மறுத்து, விருப்பம் போல்.. திசையெல்லாம் பயணிக்கும் ஆறு
தென் அமெரிக்கா /பெரு

28 ஆண்டுப் பயணத்தின் சுவடு (1984 - 2012)

வியாழன், 20 மார்ச், 2014

கண்களை நம்பாதே..!


இங்கே முதலில் நீங்கள் கண்டு உணர்ந்ததெல்லாம் பொய் என்பதை ... ஒரு நிமிடத்துக்குள்ளே அறிவீர்கள் ... அதிர்வீர்கள் :)

புதன், 19 மார்ச், 2014

நினைப்பதெல்லாம்...!வலியோர் எளிதென
நினைப்பதெல்லாம்
சில நேரங்களில்
நிறைவேறி விடுவதில்லை..

விதிவிலக்காய்
அத்தி பூத்தார்ப்போல்
நியூட்டனின் விதியும்
ஆங்காங்கே
எதிர்வினைகள் மூலம்
நிலைநிறுத்தப்பட்டுக்
கொண்டுதானிருக்கிறது ....

செவ்வாய், 18 மார்ச், 2014

என்ன இருந்தாலும் பெண் அளவுக்கு வேகம் இல்லையோ ஆணுக்கு ?


அட...... பெண்கள் முடிவெடுக்கும் வேகத்தைவிட ஆண்களிடம் வேகம் கொஞ்சம் குறைவுதான் போலிருக்கு :))
பெண்
.
.
ஆண்.....
!!!!!!
????
குதிச்சாச்சு...குதிச்சாச்சு #$#@$6

ஞாயிறு, 16 மார்ச், 2014

சூறாவளி / சூப்பர்செல் ...!


சூறாவளி / சூப்பர்செல் என்னும் அரக்கன் எப்படி இருப்பான் என்று ஒரு பார்வை பார்ப்போமா ...
சாட்டிலைட்டில் இருந்து..
மேகத்தின் மேலிருந்து..
தரையிலிருந்து..
இன்னும் நெருக்கமாக ..