சனி, 21 பிப்ரவரி, 2015

பார்த்தே படிக்கலாம் !


படித்து அறிவதை விடவும் , படமாகப் பார்த்துப் புரிதல் மிக எளிதாக மனதில் பதியும்(குழந்தைகளுக்கு :)
அந்த வகையில் இந்தப் பதிவுகள் கணக்கு, அறிவியல் எனத் தொடரும்

கணக்கு -1. பித்தகோரஸ் தேற்றம் / செங்கோண முக்கோணம்
படமாக

அதுவே .. செய்முறையில்

மேலும் சில கோணங்களில்..





புதன், 18 பிப்ரவரி, 2015

தாய்மை...தூண்டும் 7ம் அறிவு ...!


ஐந்தறிவு விலங்கினம் என்றால் என்ன ? தாய்மை என வந்து விட்டால் 7ம் அறிவு தன்னால் விளித்துக் கொள்ளும் !!
பாகம் -1 : யானை
காப்பாற்றப்பட்ட குட்டியின் குரல் கேட்டு ஓடி வரும் தாயின் பதைபதைப்பு

விழும் குட்டியைக் காப்பாற்ற வரும் துடிதுடிப்பு

ஆற்றோடு போகும் குட்டியைக் பிடிக்க ஓடும் வேகம்
இதில் எந்த இடத்திலும் ... நம்மைவிடப் பாசத்தில் குறைந்துவிடவில்லை ‘இவர்கள்’!

வியாழன், 5 பிப்ரவரி, 2015

தற்காப்பு ஆயுதங்கள் ...!


எறும்பிலிருந்து ராஜநாகம்வரை ..தற்காப்புக்கென தமக்குள்ளேயே வேதியியல்/ரசாயன ஆயுதங்களை வைத்துள்ளன
அவைகளைக் பார்த்து மனிதன் கற்றுக் கொண்டதுவா இது !

சனி, 24 ஜனவரி, 2015

தாய்மை ...!

(18 +)
கருவாகும் நாள்முதல், வரவாகும் நாள்வரையில் தாயின் உடலில் உருவாகும் மாற்றங்கள் , இடம் பெயரும் உறுப்புகள்,
10 மாதங்கள் - 10 நொடிகளில் ...


அறிவியல் குறியீடாக (வார வளர்ச்சி) ..


விலையில்லா(!) இணைப்பாக இரு படங்கள்..

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

இதுவா ஜல்லிக்கட்டு !?


ஜல்லிக்கட்டுக்கும் , ஏறுதழுவுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்னான்னு பாப்போம்..
1.
இது இப்போதைய ஜல்லிக் கட்டு ..இதில் என்ன நடக்குது ? வாடிவாசலில் வெளிவரும் ஏறு/காளையின் திமிலை ஒருகுறிப்பிட்ட தொலைவு வரையிலும் தழுவி/ அணைத்துச் செல்வதுதான் வெற்றிக்கு அடையாளம் .....அதாவது ஏறுதழுவது ... இதுவே ஏறு தழுவுதல்...... இப்போ ஜல்லிக் கட்டு என்னும் பேரில் நாம் பார்த்துக்கிட்டு இருக்கிறது ஏறுதழுவுதல் தான்.. இதைத்தான் தடை செய்திருக்கிறார்கள்

2.
இதுவும் ஜல்லிக்கட்டுதான்
இந்த முறை: - வேலியிடப்பட்டத் திடலுக்குள் நடக்கும் .
ஜல்லி / சல்லி - அக்காலப் பணம் - காளையின் கொம்பில் / நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் - கட்டப்பட்டிருக்கும் சல்லியை எடுப்பவரே வெற்றிப் பெற்றவராவார் ... இதுதான் ஜ/சல்லிக்கட்டு .
முன்பெல்லாம் காளை கட்டப்படாமல் தான் இவ்விளையாட்டு நடந்திருக்கிறது . இப்பொழுது மாடுபிடி வீரரின் குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ... மாடு ... திடலின் மத்தியிலுள்ள முளையில் கட்டப்பட்டிருக்கும்.... சொல்லப் போனால் தடை செய்ய வேண்டியது இம்முறைதான்

அதை இதுவென எடுத்து / விவரம் தெரியாமல் அவலை நினைத்து , உரலை இடித்துக் கொண்டிருக்கிறார்கள்