திங்கள், 24 மார்ச், 2014

தெரியுமா உங்களுக்கு? - 1 / கோழி


அட.. கோழியைப் பற்றித் எங்களுக்குத் தெரியாதா ? .. என்னத்த அப்படி புதுசா சொல்லப் போறாரு !!!! என்று கேட்க நினைகின்றீர்கள் தானே :)

சின்ன விளக்கம் தாரேன் மக்களே..முடிவில் இதே கேள்வியை உங்களால் கேட்க முடியாது என்பது எனக்குத் தெரியும்:))

கோழிக்கு உள்ள ஒரு சிறப்புத் திறமை ..அதன் இலக்கில் நிலைக்கும் திற்ன் / போக்கஸ்/ கான்சண்ட்ரேசன்/ ஸ்டெபிளைசேசன்.
ஆம் ..கோழியை கையில் தூக்கிக் கொள்ளுங்கள் .. அது ஒரு பொருளைப் பார்க்கும் படிச் செய்யுங்கள் ..இப்போழுது கோழியை மேலும் கீழும் அசையுங்கள் ... உடல் மட்டுமே மேலும் கீழும் போகும் .. தலை அசையாமல் அதே இடத்திலேயே இருக்கும் ( அதன் கழுத்தின் நீளத்தின் அளவே அசைக்க வேண்டும் ).. இது போல பக்க வாட்டிலும், முன்னும் பின்னும் அசைத்துப் பார்த்துவிட்டு ..இப்போது கேள்வியைக் கேளுங்கள் ..பார்ப்போம் :))

பிற பறவைகள், விலங்குகள் பற்றிப் பின்னர் தொடர்வேன்
(உங்களுக்கு விருப்பமிருந்தால் :)

6 கருத்துகள்: