வெள்ளி, 6 டிசம்பர், 2013

மண்டேலா ...!


ஒரு மனிதத்தின் சுவடு... வழிகாட்டும் வரலாறு................

1 கருத்து:

  1. RUTHRAA e.paramasivan

    மண்டேலாவின்
    மாணிக்கச்சிரிப்பை பாருங்கள்
    நம் எத்தனை மகாத்மாக்கள்
    அதனுள்ளே விரிகின்றார்கள்.

    இந்த உலகமே
    கூனிக்குறுகி...
    சுண்டைக்காயாய்
    நம் உலகமாய்
    தோட்டத்தில் காய்த்தது.

    அடக்குமுறைகளின்
    ஆரோகணங்கள்
    கப்சிப் என்று
    கையைக்கட்டின..
    அவர் பொன்முறுவல் கண்டு..
    மானிடப்பூங்கா
    அவர் இதயத்துள்
    தென்றல் வீசின.

    நிற ஆதிக்கம் சவமாய்
    "வெளுத்துப்"போயின‌
    இவர் அறப்போராட்டத்தில்.

    முள்கம்பிகளிலும்
    கன ரக பீரங்கிகளிலும்
    வேலி மிடைந்து கொண்ட‌
    தேசங்களே!
    வேண்டாம் அந்த சனியன்கள்.
    இதோ
    இந்த இதய ரோஜாவை
    அங்கே
    பதியம் இடுங்கள்.
    அதைக்கடக்கும்
    பருந்துகள் எல்லாம்
    புறாக்கள் ஆகும்
    மாயப்புன்னகை
    இந்த மனிதனின் முகத்தில்
    மட்டுமே.

    சிறைக்கம்பிகள் கூட‌
    போரடித்து துருப்பிடித்தபோதும்
    இவர் நெஞ்சுக்குள்
    மனித அன்பின்
    உற்சாக மின்னல்கள்.
    தினம் தினம்
    கைகுலுக்கும் தோழனாய்
    அந்த விறைத்த கம்பிகள்
    நெகிழ்ந்து போயின.

    துரை ந.உ அவர்களே
    அசையாத உலகத்தை
    அசைத்த மாமனிதனின்
    அசை படங்கள்
    அத்தனையும்
    உயிரை அசைக்கும்
    ஆத்மாவின் அசைவுகள்.
    இதோ
    இந்த மண்ணுக்குள்ளும்
    உலக மானிடத்தின் உயிர் அர்த்தம்
    வேர் பிடிக்கப்போகிறது.

    வெல்க அவர் தொண்டு!

    ====================================================ருத்ரா

    பதிலளிநீக்கு