திங்கள், 24 பிப்ரவரி, 2014

இதற்குப் பின்னரும் நீங்கள் சிரிக்கவில்லை என்றால்.... சந்தேகம் தான் !


ஒரு வீரனின் டைரிக்குறிப்பு :

கண்முன்னால் ஒரு வினோதமான உருவம்...

”ஒரு மாதிரியா இருக்குதே ..இது என்னவாக இருக்கும் ?”
”அட்டாக் பண்ணுவோமா அல்லது அப்டியே ஓடிப் போயிருவோமா ??”


தீவிர சிந்தனையில் இருக்கும் போது பக்கத்தில் ஏதோ அரவம்...

’அட.. எவம்டா அது .. ஒருத்தன் தீவிரமா திங்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது டிஸ்ட்டர்ப் பண்ணிக்கிட்டு .... ’

என்று கோவமாகத் திரும்பிப் பார்க்க ...அங்கே முன்னால் பார்த்து ‘ ப்ளான்’ பண்ணிக்கொண்டிருந்த அத்தே ஜந்து ..
”ஓஓஓஓஓஓ மைஈஈஈஈ காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. தப்பி ஓடீஈஈஈஈஈரூஊஊ”

என்று மூளையிலிருந்து கட்டளைகள் பறக்க .. உடலெல்லாம் பதற .. கண்ணை மூடிக் கொண்டு ஒரே ஜம்ப்ப்ப்... ரெண்டு மூனு மலை, நாலஞ்சு கடலைத் தாண்டி,,,, லேண்ட் ஆகி கண்ணைத் தொறந்தா .. மூக்குக்கு முன்னாலே அதே அது .....

என்னய்யா நடக்குது இங்கே!! .. எப்படி இது ...!!!

அப்போ அலர்ட் கொடுத்த மூளை இப்போ அப்படியே உறைந்து கிடக்க ... ”......................... ”
ஒரு ஆறேழு நிமிசத்துக்கு என்னா ஆச்சுன்னே தெரியல்ல ... த்திடீர்னு ஆல்ட்டர்னேட் அலர்ட் சிஸ்ட்டம் ஆன் ஆகி ..

’’ஓஓஓஓஓஓ மைஈஈஈஈ காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. தப்பி ஓடீஈஈஈஈஈரூஊஊ’’

அடுத்த உத்தரவு.. ஜிகா வேகத்தில் பறக்க ... ஏழெட்டு மலையைத் தாண்டும் மெகா வேகத்தில் நான்..2 கருத்துகள்: