வியாழன், 5 ஜூன், 2014

உலகச் சுற்றுச் சூழல் தினமாம் இன்று....!



தன் குடும்பம்,குழந்தைகள், வாரிசுகளின் நல்வாழ்விற்கு.. இன்றே சேர்த்து வைக்க வேண்டுமென்று ...இயற்கையைச் சீரழித்து, .. நாளைக்கென எதுவும் மிச்சம் வைக்காமல்..கண்முன் இருப்பதை எல்லாம் அழித்துப் பணமாக்கிக் கொண்டிருக்கிறோமே.. நாளைய உலகில் / வருங்காலத் தலைமுறையுள் ., நம் குழந்தைகளும் உண்டு என்பதை எப்படி மறந்தோம்... நாளை
#எதுவுமே இல்லாத உலகில் தனியாய் என்ன செய்வார்கள் அவர்கள் ??
# பசி எடுத்தால் .. நாம் சேர்ந்து வைத்திருக்கும் காகிதப் பணத்தையா தின்பார்கள் அவர்கள் ???
நிலம் : நாளொன்றுக்கு 5000 ச.கி.மீ* அளவுக்கு மரங்களை வெட்டி, காடுகளை அழித்து..ஆக்கிரமிப்பதன் விளைவு.....!!!
நீர் : நீர் நிலைகளைக் கழிவுக் கூடங்களாக்கி , ஆறுகளின் தன்மையை அழித்து , துருவங்கள் வரையிலும் பருவங்கள் மாறும் வகையில் ..அசுரத்தனமாய் செயல்படுவதன் விளைவு.......!!!
காற்று : கானகம் வரையிலும் சாலைகள், ஆலைகள் அமைத்து .. சூழலைச் சூடுபடுத்தி, காற்றினை மாசுபடுத்துவதன் விளைவு....!!!!
உண்மையை உணர்வோம் ... இயற்கைக்கு எதிராய்ச் செயல் படுவதைக் குறைப்போம்... வருங்காலம் வாழும் வகையில்...புதிய உலகுக்கு வழி வகுப்போம்

(#மீள்பதிவு)

1 கருத்து: