ஞாயிறு, 18 ஜனவரி, 2015

இதுவா ஜல்லிக்கட்டு !?


ஜல்லிக்கட்டுக்கும் , ஏறுதழுவுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்னான்னு பாப்போம்..
1.
இது இப்போதைய ஜல்லிக் கட்டு ..இதில் என்ன நடக்குது ? வாடிவாசலில் வெளிவரும் ஏறு/காளையின் திமிலை ஒருகுறிப்பிட்ட தொலைவு வரையிலும் தழுவி/ அணைத்துச் செல்வதுதான் வெற்றிக்கு அடையாளம் .....அதாவது ஏறுதழுவது ... இதுவே ஏறு தழுவுதல்...... இப்போ ஜல்லிக் கட்டு என்னும் பேரில் நாம் பார்த்துக்கிட்டு இருக்கிறது ஏறுதழுவுதல் தான்.. இதைத்தான் தடை செய்திருக்கிறார்கள்

2.
இதுவும் ஜல்லிக்கட்டுதான்
இந்த முறை: - வேலியிடப்பட்டத் திடலுக்குள் நடக்கும் .
ஜல்லி / சல்லி - அக்காலப் பணம் - காளையின் கொம்பில் / நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் - கட்டப்பட்டிருக்கும் சல்லியை எடுப்பவரே வெற்றிப் பெற்றவராவார் ... இதுதான் ஜ/சல்லிக்கட்டு .
முன்பெல்லாம் காளை கட்டப்படாமல் தான் இவ்விளையாட்டு நடந்திருக்கிறது . இப்பொழுது மாடுபிடி வீரரின் குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ... மாடு ... திடலின் மத்தியிலுள்ள முளையில் கட்டப்பட்டிருக்கும்.... சொல்லப் போனால் தடை செய்ய வேண்டியது இம்முறைதான்

அதை இதுவென எடுத்து / விவரம் தெரியாமல் அவலை நினைத்து , உரலை இடித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஞாயிறு, 22 ஜூன், 2014

அலை......! அறியாத உண்மை ஒன்று


கடல்.. அலையாய் உருவெடுத்து , நுரைத்து கரையைத் தொடுவதற்கு முந்தைய நிலை ... கடலலை ஆழ்கடலில் இருந்து கிளம்பி, கரையை வந்தடைவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ... ஆனால் உண்மை அவ்வாறில்லை ..

நீரின் மேல்மட்டத்தில் தெரியும் அசைவுவேகத்தின் அளவுக்கு அதில் உள்ள மூலக்கூறுகள் (பார்டிக்கிள்) நகர்வதில்லை .

இதோ இன்னுமொரு மாதிரி .. ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கீழுள்ள நீர் அசைவதுகூட இல்லை

வியாழன், 19 ஜூன், 2014

கண்ணால் காண்பதும் பொய்...!


ஆம் ..இதோ சான்றுகள்
இருவேறு துசையில் அசையும் இரண்டு/இரண்டு கோடுகள் .... விடுபட்டிருக்கும் இடத்தை மறைத்தவுடன் மூளை அதன் இடைவெளியை நிரப்பிக் கொள்கிறது ... ஒரே சதுரம் போலத் தெரிகிறது

நடுவிலுள்ள பச்சைப் புள்ளியைக் கூர்ந்து கவனியுங்கள் .. சுற்றியுள்ள மஞ்சள் புள்ளிகள் மறையத் துவங்கும்

மேலுள்ள சக்கரம் எந்தப் பக்கமாகச் சுழல்கிறது ?? அவசரப் பட வேண்டாம் ... படத்தின் கீழ்கூர்ந்து கவனியுங்கள் ..எந்தப்பக்கம் சுழல்கிறது ? இப்பொழுது படத்தின் மேல்ப் பகுதியில் கவனியுங்கள் ... இப்பொழுது சொல்லுங்கள் :)))

வியாழன், 5 ஜூன், 2014

உலகச் சுற்றுச் சூழல் தினமாம் இன்று....!



தன் குடும்பம்,குழந்தைகள், வாரிசுகளின் நல்வாழ்விற்கு.. இன்றே சேர்த்து வைக்க வேண்டுமென்று ...இயற்கையைச் சீரழித்து, .. நாளைக்கென எதுவும் மிச்சம் வைக்காமல்..கண்முன் இருப்பதை எல்லாம் அழித்துப் பணமாக்கிக் கொண்டிருக்கிறோமே.. நாளைய உலகில் / வருங்காலத் தலைமுறையுள் ., நம் குழந்தைகளும் உண்டு என்பதை எப்படி மறந்தோம்... நாளை
#எதுவுமே இல்லாத உலகில் தனியாய் என்ன செய்வார்கள் அவர்கள் ??
# பசி எடுத்தால் .. நாம் சேர்ந்து வைத்திருக்கும் காகிதப் பணத்தையா தின்பார்கள் அவர்கள் ???
நிலம் : நாளொன்றுக்கு 5000 ச.கி.மீ* அளவுக்கு மரங்களை வெட்டி, காடுகளை அழித்து..ஆக்கிரமிப்பதன் விளைவு.....!!!
நீர் : நீர் நிலைகளைக் கழிவுக் கூடங்களாக்கி , ஆறுகளின் தன்மையை அழித்து , துருவங்கள் வரையிலும் பருவங்கள் மாறும் வகையில் ..அசுரத்தனமாய் செயல்படுவதன் விளைவு.......!!!
காற்று : கானகம் வரையிலும் சாலைகள், ஆலைகள் அமைத்து .. சூழலைச் சூடுபடுத்தி, காற்றினை மாசுபடுத்துவதன் விளைவு....!!!!
உண்மையை உணர்வோம் ... இயற்கைக்கு எதிராய்ச் செயல் படுவதைக் குறைப்போம்... வருங்காலம் வாழும் வகையில்...புதிய உலகுக்கு வழி வகுப்போம்

(#மீள்பதிவு)

செவ்வாய், 3 ஜூன், 2014

சிதறும் உயிர்கள்...!


மனஉறுதி உள்ளவர்கள் பார்க்கவும் .. கவனக் குறைவு / மனிதத் தவறினால் சிதறும் உயிர்கள்