எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஏப்ரல், 2014

பந்து ..!


பந்து ...பந்துதானே!!...பந்தென்ன செய்துவிடும் ?

வியாழன், 23 ஜனவரி, 2014

மின்சாரம் தாக்கினால்...!


மின்சாரம்.. விளயாடக் கூடாத ஒன்று ..! மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் நம் உடல் ஒரு கடத்தியாக / பாலமாக மாறாதவரை மின்ன்சாரத்தால் நமக்கு பாதிப்பில்லை. எடுத்துக்காட்டாக ...

1)கரண்டுக் கம்பி காக்கா ... மின்சாரம் உள்ள ஒரு கம்பியில் அது உட்கார்ந்திருக்கும் வரையிலும் அதற்கு ஆபத்தில்லை.. ஆனால் இறக்கையை விரிக்கும் பொழுது , பக்கத்துக் கம்பியில் அது பட்டால் , உடனே கரண்ட் ஷாக் அடித்து , விழுந்து விடும் .. இங்கே இரண்டு கம்பிகளுக்கும் இடையே மின்சாரம் கடந்து செல்ல அது ஒரு பாலமாக மாறிவிடுகிறது ..

2)செருப்புக்காலில் இருக்கும் பொழுது, மின்சாரத்தைத் தொட்டாலும் நமக்கு ஒன்றும் ஆவதில்லை. வெறும் காலென்றால் மின்சாரத்தை தொட்டிரும் பாகத்திலிருந்து காலவழியே பாய்ந்து மின்சாரம் ’எர்த்’ஆகிவிடும் . அந்தப்பாதையிலிருக்கும் பாகங்கள் (பெரும்பாலும்)எரிந்துவிடும் .
(#மின் பொறியாளர்கள் உறுதி செய்யவும் )
#சில காட்சிகள் .. மன திடம் இல்லாதோர் பார்க்காமல் தவிர்க்கவும்

வியாழன், 5 டிசம்பர், 2013

பதறிய காரியம்...!

எதிலும் பதற்றம் தவிர் ..பதறிய காரியம் சிதறிப் போகும் ...

வியாழன், 28 நவம்பர், 2013

வெள்ளித்திரை மயக்கம்..

திரையில் கதாநாயகர்கள் செய்வதை எல்லாம் ..தரையில் நீ செய்ய முயன்றால்... காயலான்கடைக்குத் தான் செல்ல வேண்டி இருக்கும் சாமான்கள் .
வாண்டேம்..ஹாலிவுட் கதாநாயகர்..தற்காப்புக் கலை வல்லுனர் .. பாதுகாப்பு ஏற்பாடுகளின் நடுவே அவரால் முடியும் இது
புலியைப் பார்த்துச் சூடு போட்டுப் பலியாகும் நம் கதாநாயகர் ..இனி எதற்கு ஆகும் அது

திங்கள், 25 நவம்பர், 2013

சாலையில் தூங்கினால் ..!

சமயம் அறியாமல் தூங்கினால் ..சாவு நெருங்கி வரும்
#உட்கார்ந்து தூங்கலாம்..தப்பில்லை
#நின்றுகொண்டும் தூங்கலாம்..தப்பில்லை
#வாகனம் ஓட்டும் பொழுது தூங்கினால்..தப்பாது தலை

சனி, 16 நவம்பர், 2013

பணத்தையா தின்பாய் ...!


தன் குடும்பம்,குழந்தைகள், வாரிசுகளின் நல்வாழ்விற்கு.. இன்றே சேர்த்து வைக்க வேண்டுமென்று ...இயற்கையைச் சீரழித்து, .. நாளைக்கென எதுவும் மிச்சம் வைக்காமல்..கண்முன் இருப்பதை எல்லாம் அழித்துப் பணமாக்கிக் கொண்டிருக்கிறோமே.. நாளைய உலகில் / வருங்காலத் தலைமுறையுள் ., நம் குழந்தைகளும் உண்டு என்பதை எப்படி மறந்தோம்... நாளை
#எதுவுமே இல்லாத உலகில் தனியாய் என்ன செய்வார்கள் அவர்கள் ??
# பசி எடுத்தால் .. நாம் சேர்ந்து வைத்திருக்கும் காகிதப் பணத்தையா தின்பார்கள் அவர்கள் ???
நிலம் : நாளொன்றுக்கு 5000 ச.கி.மீ* அளவுக்கு மரங்களை வெட்டி, காடுகளை அழித்து..ஆக்கிரமிப்பதன் விளைவு.....!!!
நீர் : நீர் நிலைகளைக் கழிவுக் கூடங்களாக்கி , ஆறுகளின் தன்மையை அழித்து , துருவங்கள் வரையிலும் பருவங்கள் மாறும் வகையில் ..அசுரத்தனமாய் செயல்படுவதன் விளைவு.......!!!
காற்று : கானகம் வரையிலும் சாலைகள், ஆலைகள் அமைத்து .. சூழலைச் சூடுபடுத்தி, காற்றினை மாசுபடுத்துவதன் விளைவு....!!!!
உண்மையை உணர்வோம் ... இயற்கைக்கு எதிராய்ச் செயல் படுவதைக் குறைப்போம்... வருங்காலம் வாழும் வகையில்...புதிய உலகுக்கு வழி வகுப்போம்